ETV Bharat / state

காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள்! - இடைநிலை ஆசிரியர் ஊதியம்

Intermediate teachers on hunger strike: 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' என்பதை வலியுறுத்தி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தததால் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 25, 2023, 7:34 PM IST

சென்னை: 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வேண்டும் என்பதை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் கடந்த டிசம்பர் மாதம் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர்.

வரும் 28ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும்
காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்த இடைநிலை ஆசிரியர்கள்!

அவர்களின், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வழங்குவது குறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அந்த அறிக்கையின் அடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும் எனத் தெரிவித்தார். ஆனால், இதுவரை இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர்ந்து காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர். இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவைச் சந்தித்து இடைநிலை பதிவு மூப்பு சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், எந்த வித சமரச முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டபடி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

கடந்த முறை, போராட்டம் நடத்திய போது ஏராளமான ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னரும் மீண்டும் வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ராபர்ட் கூறும் போது, திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311ல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.

1.6.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்குக் கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, 1.6.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்றும் 'ஒரே பணி' 'ஒரே கல்வித் தகுதி' என இருந்த போதும் இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதைக் களையக்கோரிக் கடந்த 10 ஆண்டுகளாக, எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்போது, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு' 'சம ஊதியம்' வழங்கப்படும் எனக் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் 1.1.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது கல்வித்துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. 2009ல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக் கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாகக் கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். ஊதிய முரண்பாட்டை விரைந்து களையக் கோரி மூன்று போராட்டங்களை நடத்திடத் தீர்மானித்தோம்.

முதல் கட்டமாக ஆகஸ்ட் 13 கோரிக்கை ஆயத்த மாநாடு நடத்தப்பட்டது. அப்போது, சுமார் 6,500 ஆசிரியர்களுக்கு மேல் தமிழ்நாடு முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாகச் செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 27ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் சென்று வருகிறோம்.

இந்நிலையில், அரசு செவி சாய்க்கவில்லை என்பதால் செப்டம்பர் 28 முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துவது என்றும், கோரிக்கை முடியும் வரை போராட்டத்தைக் கைவிடுவதில்லை எனவும், தீர்மானம் நிறைவேற்றினோம்.

ஆனால், அரசு எங்களைப் பேச்சுவார்த்தைக்கு வரும் படி அழைத்தது. பள்ளிக்கல்வித்துறை செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி செப்டம்பர் 28ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லை - சென்னை வந்தே பாரத்.. கன்னியாகுமரி வரை நீட்டிப்பு! பிரதமருக்கு ஓ.பி.எஸ் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.