சென்னை மாநகர பகுதிகளில் கடந்த மாதத்தில் கரோனா தொற்று சற்றே குறையத் தொடங்கியது. இதையடுத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சென்னை பெருநகர மாநகராட்சியின் சுகாதாரத்துறை குறைத்து வந்த நிலையில், மீண்டும் சென்னை நகருக்குள் கட்டுப்பாட்டுப் பகுதிகள் (containment zones) அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்றைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சி 10ஆவது மண்டலத்தில் 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், அதில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 28 பேரும், 11ஆவது மண்டலத்தில் 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், அதில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் 10 பேரும், 12ஆவது மண்டலத்தில் 4 கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், அதில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 25 பேரும், 15ஆவது மண்டலத்தில் 2 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 12 கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவிட்-19 கால வங்கி கடனில் வட்டித் தொகை தளர்வு - மத்திய அரசு