2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளில் அதிக எண்ணிக்கையில் மாணவ- மாணவியர் சேர்ந்து தங்கிப் பயிலும் வகையில் மாணவ , மாணவியரின் சேர்க்கைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டதை செயல்படுத்தும் விதமாக, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்ட நிலையில், உணவு மானியம் பெறும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 39 தனியார் விடுதிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான பெற்றோரின் ஆண்டு வருமானத்தை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெண்களுக்கு கடனுதவி: தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை