ETV Bharat / state

பிரபல வணிக நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை...!

author img

By

Published : Dec 1, 2021, 9:32 AM IST

Updated : Dec 1, 2021, 12:53 PM IST

income tax raid on saravana stores in chennai  income tax raid on saravana stores  chennai latest news  சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை  வருமான வரித்துறையினர் சோதனை  சென்னை சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை  சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்

09:26 December 01

சென்னையில் பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை புரசைவாக்கம், தியாகராயர் நகர், போரூர், குரோம்பேட்டை பகுதிகளில் உள்ள பிரபல வணிக நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று (டிசம்பர் 1) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

சுமார் 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரோம்பேட்டையில் இயங்கி வரும் சரவணா ஸ்டோர்ஸில் இன்று (டிசம்பர் 1) காலை முதல் வருமான வரித்துறையினர் 15 நபர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கடைக்கு வந்த உடன் அவர்களிடமிருந்து செல்போன்களை வாங்கி வைத்து கொண்டு அவர்களின் கீழே உள்ளே பார்க்கிங்கில் அமர வைத்துள்ளனர். துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்போடு சோதனை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: அதிமுக தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்

Last Updated : Dec 1, 2021, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.