சென்னை நுங்கம்பாக்கம், லேக் ஏரியா தெருவில் வசித்து வருபவர் மணி கண்ணன் (54). இவர், கிரீம்ஸ் சாலை பகுதியில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் சேவை வரித்துறையில் சீனியர் நுண்ணறிவு பிரிவு அலுவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இவரது மனைவி கலாவும் வருமான வரித்துறை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில், கடந்த மாதம் மணி கண்ணனுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்.7) காலை மணி கண்ணன் தனக்குச் சொந்தமான பக்கத்து தெருவில் உள்ள வீட்டிற்குச் சென்று சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரமாகியும் மணி கண்ணன் அறை திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மகன் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, மணி கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடனடியாக நுங்கம்பாக்கம் காவல்துறையினருக்கு குடும்பத்தினர் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மணி கண்ணன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தூக்கிட்டு கொண்ட அறையை சோதனை செய்த போது மணி கண்ணன் எழுதிய கடிதம் சிக்கியுள்ளது. அந்தக் கடிதத்தில் தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், எனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என எழுதி வைத்து தற்கொலையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கரோனா பாதிப்பினால் மனமுடைந்து தற்கொலையில் ஈடுபட்டுள்ளாரா அல்லது குடும்ப பிரச்சனையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரோனா காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வருமான வரித்துறை அலுவலர்!
சென்னை: கரோனாவால் தனிமைப்படுத்தபட்ட வருமான வரி துறை அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.