ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு மூன்றாவது முறையாக சம்மன்!

author img

By

Published : Jul 2, 2023, 6:18 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமான வரித்துறை மூன்றாவது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு மூன்றாவது முறையாக சம்மன்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் தொழில் தொடர்புடைய நபர்கள் வீடுகளில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், அவர்களுக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக செய்த மோசடி வழக்கில் சட்ட விரோதமாக பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது கைது செய்யப்பட்டு உடல்நல குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகம்படி சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், அசோக்குமார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வருவதாக அமலாகத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரிடம் விசாரணை நடத்த ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பி உள்ளது. இரண்டும் முறை அனுப்பப்பட்ட சம்மனிலும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஆஜராகவில்லை என தெரிவித்துள்ளனர்.

தற்போது மூன்றாவது முறையாக அசோக்குமாருக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அதில் நாளை வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கைப்பற்றப்பட்ட ஆவணத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: மேகதாதுவில் அணை கட்டும் முயற்சி... திமுக எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் - ஈபிஎஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.