ETV Bharat / state

டீல் பேசிய காவல் துறை.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைக்கும் அமர் பிரசாத் ரெட்டி.. நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன? - ஆலந்தூர் நீதிமன்றம்

amar prasad reddy: பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஆறு பேர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமர் பிரசாத் ரெட்டி, தமிழ்நாடு ஆளும் கட்சி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியதோடு பாஜக 40 நாடாளுமன்ற தொகுதிக்கு 40 வெற்றி பெறும் என உறுதியளித்தார்.

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 9:14 PM IST

அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வீட்டின் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக சென்ற மாநகராட்சியின் ஜேசிபி வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆறு பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு கடந்த நவம்பர் 10ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஆறு பேரும், இரண்டு வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரண்டு வேளையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமென்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய அமர் பிரசாத் ரெட்டி, சுரேந்தர் குமார், செந்தில்குமார், வினோத்குமார், பாலமுருகன், கன்னியப்பன் ஆகிய ஆறு பேரும் இன்று(நவ.15) காலை ஆலந்தூர் நீதிமன்றத்தில இரண்டாவது அமர்வு நீதிபதி சந்திர பிரபா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "என்னுடைய கைது பற்றிக் கூற வேண்டும் என்றால் நான்காவது தூணான பத்திரிக்கை தான் கேள்வி கேட்க வேண்டும். என் மீது பொய் வழக்கு போட்டு புழல் சிறையில் அடைத்தனர். நாங்கள் பயப்பட மாட்டோம். பாஜகவின் சங்க கூட்டங்களே ஜெயில் போலத்தான் இருக்கும். நாங்கள் அங்கேயே தயார் ஆகித்தான் வருகிறோம். ஆனால் பத்திரிகையாளர்கள் ஆளுங்கட்சியை பார்த்து கேள்வி கேட்க வேண்டும். இதெல்லாம் ஒரு வழக்கா?, இது போன்ற வழக்குகளை போட்டு பாஜகவை நிறுத்தி விட முடியுமா அல்லது தலைவர்களின் பணியை அடக்கி விட முடியுமா?.

திமுக-விற்கும் முதலமைச்சருக்கும் தோல்வி பயம் வந்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி பணி செய்யப் போகிறோம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதனால் எதிர்த்து நிற்கும் அனைவர் மீதும் பொய் வழக்கு போட்டு கொண்டிருக்கிறார்கள். நான் முதல் நாளில் இருந்தே கேட்டுக் கொண்டிருக்கிறேன், உங்களிடம் ஆதாரம் இருந்தால் அதை நீதிமன்றத்தில் காட்டுங்கள் என்று. ஒரு மாநிலத்தின் ஆளுநர் மாளிகை முன்பு வெடிகுண்டு போடுகிறார்கள். அதனுடைய புகைப்படங்களை காட்ட முடிந்த முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைக்கு, என்னுடைய சம்பவத்தில் எனக்கு எதிரான ஆதாரங்கள் எதையும் ஏன் காண்பிக்க முடியவில்லை.

பொய் வழக்கு போட்டால் நாங்கள் அப்படியே கட்சியை விட்டு ஓடி போகபோறதில்லை. சிறையில் அடைக்கப்பட்டபோது சிறையில் முழு பாதுகாப்பில் இருக்கப்பட வேண்டிய நான், அதிகப்படியான குற்றங்களை செய்துவிட்டு காவல்துறையினரால் சுடப்பட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளிகளுடன் என்னை சிறையில் வைத்துள்ளார்கள். இதுபோன்று சிறையிலையும் ஆளும் கட்சியினர் அவர்களுடைய முழு பலத்தினை அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள்.

சிறை சாலைக்குள் மிகப்பெரிய மனித உரிமை மீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என் மீது இத்தனை வழக்குகள் தொடுத்ததற்கு நான் முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறைச்சாலையில் பயன்படுத்தப்படும் ரேஷன் அரிசி 25 சதவிகிதம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. காலையில் கொடுக்கப்படும் டீயை பார்த்தால், அந்த டீயை கண்டுபிடித்தவன் உயரத்தில் இருந்து குதித்து விடுவான். மனிதர்களை மனிதர்கள் போல் நடத்த முடியவில்லை, அங்கேயும் கொள்ளை அடிக்கிறார்கள்.

வெளியில் கடைகளில் கிடைக்கும் 30 ரூபாய் காஜா பீடி சிறைக்குள் 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள். சிறையில் ஒவ்வொரு அறையிலும் 50 பேர் நூறு பேர் என எருமை மாடுகளை அடைத்து வைப்பது போல் வைத்துள்ளார்கள். முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துறை இத்தனை அவலமாக இருக்கிறது. பொய் வழக்குகள் பதியப்பட்டதை அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில் நேரடியாக பார்க்க முடிந்தது. மனித உரிமைகள் மீறல் உள்ள சிறையில் ஒரு மனிதருக்கு மட்டும் இரண்டு மின்விசிறிகள் ஏர் கூலர் கிடைக்கிறது.

சிறையில் இருந்து என்னை காவல் நிலையம் அழைத்துச் செல்வதற்கு முன்பு என்னிடம் டீல் பேசினார்கள். அதற்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை. விரைவில் டெல்லியில் சென்று அதைப் பற்றி நான் கூற இருக்கிறேன். அதற்காண சிசிடிவி ஆதாரங்களும் சிறை துறையினரிடம் உள்ளது. இதுபோன்று ஒரு சிலரை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்காக அதிகாரிகள் அவர்களின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது. என்னிடம் பேசிய டீலுக்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்காக அரசு பேருந்தில் அழைத்துச் சென்றார்கள். அதற்கு நான் கவலைப்படவில்லை, அதில் எனக்கு மகிழ்ச்சி தான். பொதுமக்களுடன் பயணித்தேன் தனியாக அழைத்துச் சென்று இருந்தால் என்னை துப்பாக்கியால் சுடுவதற்கும் தயங்கமாட்டார்கள்.

உதயநிதியிடம் சென்று முட்டையை கையில் எடுத்துக் கொண்டு வருகிறீர்கள், நீட்டை ரத்து செய்வோம் என கூறுகிறீர்கள், இதுதான் இன்று தமிழ்நாட்டிற்கு தேவையா?. பேப்பரை புரட்டினால் திருநெல்வேலியில் ஒரு நாளைக்கு ஏகப்பட்ட கொலைகள் நடந்துள்ளது. ஒரு மாவட்டத்தில் மட்டும் இத்தனை குற்றங்கள் நடக்கிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு நடக்கும். இதை தடுக்க முடியவில்லை ரவுடிகளின் கூடாரமாக தமிழ்நாடு மாறி வருகிறது. அதை தடுப்பதை விட்டுவிட்டு பொய் வழக்குகள் போட்டு பாஜகவினரை முடக்க முடியும், பாஜகவின் வளர்ச்சியை தடுத்துவிட முடியும் என்று நினைத்தால் அதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இல்லை.

நாங்கள் இன்னும் அசுர வளர்ச்சியில் வளர போகிறோம். 40 நாடாளுமன்ற தொகுதிக்கு 40 வெற்றி பெறுவோம். ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தயாராகிக் கொள்ளுங்கள், தோல்வி பயத்திலிருந்து தப்பிப்பதற்காக என் மீது எத்தனை வழக்குகள் போட்டுக்கொள்ளுங்கள். பாஜகவினர் யாரும் ஜெயிலுக்கு போவதற்கு தயங்க மாட்டார்கள். உதயநிதியை பார்க்கும் போது கேள்வி கேளுங்கள். எங்கள் தலைவரிடம் கேட்பது போல் அதற்கு அவர் பதில் கூறுகிறாரா என்று பார்ப்போம்" என வன்மையாக சாடினார்.

இதையும் படிங்க: ஆளுநர் மறுப்பால் கௌரவ டாக்டர் பட்டம் பெற முடியாமல் மறைந்தார் தியாகி என்.சங்கரய்யா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.