ETV Bharat / state

மருத்துவத்துறையில் தமிழ் சொற்கள்! - சென்னை ENT மாநாட்டில் முடிவு

மருத்துவத்துறையில், தமிழ் சொற்களை உருவாக்கி பயன்படுத்த உள்ளதாகவும், இதன் மூலம் மருத்துவ அறிவியலிலும் தமிழ்மொழி நூல்கள் இயற்றப்படும் எனவும் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 29, 2023, 10:47 PM IST

மருத்துவத்துறையில் தமிழ் சொற்கள்! - சென்னை ENT மாநாட்டில் முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் தற்பொழுது தமிழுக்கான அரசு நடைபெறுவதை பயன்படுத்திக் கொண்டு மருத்துவத்துறையில் தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்துவோம் என மருத்துவர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்தார்.

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை அரங்கில் தமிழ்நாடு காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் சார்பில் தமிழில் முதல் முறையாக நடத்தப்படும் "காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கழுத்து மருத்துவ அறிவியல் மாநாடு" (ENT Medical Conference in Chennai) இன்று (ஜன.29) நடந்தது. இதனைத் தொடங்கி வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டு மலரையும் வெளியிட்டார்.

இந்த மாநாடு குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ கூட்டமைப்பின் ஆலோசகர் மோகன் காமேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளனர். முதன்முறையாக முழுவதும் தமிழில் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற உள்ளன. மேலும் குறிப்பாக காது , மூக்கு, தொண்டை சிகிச்சை முறை அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் பேசப்பட உள்ளது.

மேலும், இம்மாநாட்டில் பேசப்படும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு நூலாக வெளியிடப்பட உள்ளது. மருத்துவத்துறையில் உள்ள ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் இங்கு பேசப்பட உள்ளன. ஆங்கில மருத்துவத்தில் சில சொற்களுக்கு தமிழ் வாக்கியங்களை மருத்துவர்கள் தான் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் தற்பொழுது தமிழுக்கான அரசு நடைபெறுகிறது. இதனை நாம் பயன்படுத்திக் கொண்டு மருத்துவத்துறையில் தமிழ்ச் சொற்களை உருவாக்கி பயன்படுத்துவோம்.

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே மருத்துவத்திற்கு கலைச் சொற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. துணை வேந்தர் நியமிக்கப்பட்டவுடன் அவருடன் இணைந்து கலை சொற்களை உருவாக்கும் பணியில் ஈடுபடுவோம். மருத்துவத்திற்கு கலைச்சொற்கள் இருப்பதால் புதிய கலை சொற்களை உருவாக்கியதில் சிரமம் இல்லை. மருத்துவத்துறை அறிஞர்கள் இணைந்து கலை சொற்களை உருவாக்கி செயல்படுத்துவோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: TANCET, CEETA நுழைவுத் தேர்வுகளுக்கு பிப்.1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.