சென்னை: உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் கருகி ஏற்பட்ட விபத்தில் 4 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. நால்வரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குரோம்பேட்டை தண்டு மாரியம்மன் கோயில் தெரு, துர்கா நகரில் உயர் மின்னழுத்தம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் சாதன பொருட்கள் சேதமானது. இந்த சம்பவத்தால் மின்சார பொருட்கள் சேதமடைந்து, வயர் தீப்பிடித்து எரிந்து புகை மூட்டம் ஏற்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மியால் போலீஸ் தற்கொலை முயற்சி.. வரதட்சணை கொடுமை என பெண் போலீஸ் புகார்..
இதன் காரணமாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 2 குழந்தைகள், கர்ப்பிணி பெண் உட்பட 4 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. சிறிய தீக்காயங்களும் மீட்கப்பட்ட இவர்களை குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். தற்போது கொளஞ்சி (வயது 53), கர்ப்பிணி பெண் சித்ரா (வயது 30), அஜய் குமார் (வயது 2) மற்றும் 4 மாத குழந்தை ரோகித் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திடீரென ஏற்பட்ட உயர் மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்பால் 4 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதும், மின்சாதன பொருட்கள் சேதமானதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: Toxic Gas Inhalation: விஷவாயு தாக்கி 3 விவசாயிகள் பலி.. கிணற்றில் இறங்கிய போது நேர்ந்த கொடூரம்!