ETV Bharat / state

எழுத்து வடிவம்கூட இல்லாத மொழியை திணிப்பதா? - வேல்முருகன் கண்டனம்

author img

By

Published : Nov 30, 2020, 5:12 PM IST

யாருக்கும் தாய்மொழி இல்லாத, எழுத்து வடிவம் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிப்பதா எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Imposing language that doesn't even have a written form? Velmurugan condemnation

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமஸ்கிருத மொழி என்பது எந்தக் காலத்திலும் இருந்ததில்லை. காரணம், அதற்கு எழுத்தே கிடையாது. சடங்குகளின்போது உதிர்க்கப்படும் ஒலி வடிவம், அவ்வளவே.

சமஸ்கிருதத்தில் நூல்கள் இருப்பதாகச் சொன்னாலும் வேறு மொழி எழுத்தில்தான் அவை இருக்கும். ஆகவே அது யாருக்கும் தாய்மொழியாக இல்லாத ஒரு மொழி என்பதுதான் உண்மை.

சமஸ்கிருத ஒலி வடிவத்திலிருந்தும் வேறு சில மொழிகளிலிருந்தும் உண்டாக்கப்பட்ட மொழிதான் இந்தி. அதிலும்கூட போஜ்புரி இந்தி, ராஜஸ்தானி இந்தி, சட்டீஸ்கரி இந்தி எனப் பல வகைகள் உள்ளன. பொதுவான இந்தி என்று ஒன்றே கிடையாது. ஆனால் பலவித இந்தி பேசுவோரையும் சேர்த்துக் கூட்டி, இந்தி பேசுவோர்தான் அதிகம் பேர் என்று கதை கட்டுகின்றனர்.

அப்படிப் பெரும்பான்மையோர் பேசாத இந்தி, ஆட்சிமொழி கிடையாது. ஆங்கிலத்தோடு இந்தியும் ஓர் அலுவல் மொழிதான். அதைத் திணிக்கப் பார்த்து, அதற்கெதிராகக் குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெரும் போராட்டமே ஏற்பட்டு விரட்டியடிக்கப்பட்டது.

இப்போது யாருக்குமே தாய்மொழியாக இல்லாத சமஸ்கிருதத்தை புதிய கல்விக் கொள்கை 2020இல் சேர்த்திருப்பதோடு, சமஸ்கிருதத்தில் செய்தித் தொகுப்பு ஒளிபரப்ப வேண்டும் என்று மாநில மொழிச் தொலைக்காட்சிகளுக்கெல்லம் சுற்றறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.

பார்க்க ஆளே இல்லாது, மக்களின் காசைக் கரியாக்கும் இந்த வீண்வேலையை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதைக் கைவிடுமாறு எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

இதனை வன்மையாகக் கண்டிப்பதுடன், உடனடியாக இந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்றும் எச்சரிக்கிறோம். அத்தோடு, யாருக்கும் தாய்மொழி இல்லாத, மொழிக்குரிய தகுதி ஏதும் இல்லாத சமஸ்கிருதத்தை அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையிலிருந்து உடனடியாகத் நீக்குமாறும் வலியுறுத்துகிறோம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சமஸ்கிருத திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டை பிளக்கும் கோடாரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.