ETV Bharat / technology

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே: ரூ.7000 இருந்தால் போக்கோ 5ஜி போன் வாங்கலாம்! - Poco 5G phone offer Flipkart - POCO 5G PHONE OFFER FLIPKART

Poco Phone Flipkart Sale: செப்டம்பர் 27 அன்று தொடங்கும் 2024ஆம் ஆண்டின் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே சலுகை (Flipkart Big Billion Day Sale 2024) தினங்களில் போக்கோ 5ஜி போன்களை சுமார் 7,000 ரூபாய்க்கு வாங்கலாம்.

buy poco 5g phone under ten thousand rupees in upcoming flipkart big billion day sale
பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே போக்கோ ஆஃபர் (Flipkart)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 24, 2024, 5:39 PM IST

Poco Phone Flipkart Sale: பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 27 அன்று தொடங்குகிறது. அந்த தினங்களில், 'போக்கோ இந்தியா' நிறுவனம் தங்களில் பல தயாரிப்புகளுக்கு பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. தங்களின் பெரும்பாலானத் தயாரிப்புகளுக்கும் போக்கோ நிறுவனம் கூடுதல் வங்கிச் சலுகைகளை அறிவித்துள்ளது.

கீழ்வரும் பட்டியலில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் பல சலுகைகளுடன் மலிவு விலையில் கிடைக்கின்றன. இதன் வாயிலாக சுமார் 7,000 ரூபாய் இருந்தால், புதிய 5ஜி போன்களை வாடிக்கையாளர்கள் வாங்கி விடலாம்.

பிளிப்கார்ட் சலுகைப் பட்டியலில் உள்ள போக்கோ போன்கள்:

இந்த சலுகைகளில் போக்கோ எஃப்6 5ஜி (POCO F6 5G), போக்கோ எக்ஸ்6 ப்ரோ 5ஜி (POCO X6 Pro 5G), போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி (POCO X6 Neo 5G) ஆகியவையும் அடங்கும். இவை மேம்பட்ட அம்சங்களுக்கு பெயர் பெற்ற 5ஜி ஸ்மார்ட்போன்களாகும். போக்கோ எஃப்6 ஸ்மார்ட்போன் ஆனது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Qualcom Snapdragon 8S Gen3) சிப்செட், இரட்டை 50 மெகாபிக்சல் சோனி கேமரா உடன் விற்பனைக்கு இருக்கிறது.

கூடுதலாக, போக்கோ சி65 5ஜி, C61 5G, M6 5G, M6 Plus 5G, X6 5G ஆகிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது சிறப்பு விலையில் கிடைக்கும்.

போக்கோ போன் சலுகை விலை:

இதில் போக்கோ எம்6 5ஜி (POCO M6 5G) சிறந்த பட்ஜெட் 5ஜி போனாக உள்ளது. மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடல்களான POCO C65 5G மற்றும் POCO C61 5G ஆகியவை முறையே ரூ.6,799 மற்றும் ரூ.6,299 என்ற விலைக்கு சலுகை தினங்களில் வாங்கலாம். போக்கோ எக்ஸ் 6 ப்ரோ 5ஜி போனை ரூ.18,999 என்ற விலைக்கு வாங்கலாம்.

மேலும், இந்த சலுகை விற்பனை தினங்களில், போக்கோ X6 5ஜி ரூ.14,999 விலைக்கும், போக்கோ X6 நியோ 5ஜி ரூ.11,999 விலையிலும் கிடைக்கும். முறையே போக்கோ எம்6 பிளஸ் 5ஜி ரூ.10,999 என்ற விலைக்கும், போக்கோ எம்6 5ஜி ரூ.7,499 என்ற விலையிலும் வாங்கலாம்.

இதையும் படிங்க:

  1. இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தோம்; அமேசானின் அதிரடி மொபைல் தள்ளுபடிகள்! - Amazon Mobile Offers
  2. பிளிப்கார்ட்டில் ஆஃபர் மழை: 5ஜி மொபைல் போன் எங்கக்கிட்ட தான் கம்மி; அமேசானுக்கு கடும் நெருக்கடி! - Flipkart offers on mobiles

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.