சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், 'மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிக் கொண்டிருந்த, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று தற்போது புயலாக உருவாகியுள்ளது. இதற்கு 'புல் புல்' புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காளம் மற்றும் வங்கதேச கரையை நோக்கி நகரக்கூடும்.
இதையொட்டி, தமிழ்நாட்டு மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு மத்திய வங்கக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நவம்பர் 8ஆம் தேதி(நாளை) முதல் 10ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் வறண்ட வானிலை தொடரும். கடந்த 24 மணி நேரத்தில் திருப்பதியில் 5 செ.மீ., மழையும், சிவகங்கையில் 3 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:
மகா புயல் எதிரொலி: குஜராத்தில் ஒதுங்கிய 600 தமிழக மீனவர்கள் - உதவுமா அரசு?