ETV Bharat / state

நெருங்கும் பிப்பர்ஜாய் புயல்; அதி தீவிரப் புயலாக மாறி வடக்கு நோக்கி நகரும் - சென்னை வானிலை ஆய்வு மையம் - தமிழ்நாடு மழை செய்திகள்

பிப்பர்ஜாய் புயல் அதி தீவிரப் புயலாக மாறி வடக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடக்கியுள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

biporjoy cyclone
பிப்பர்ஜாய் புயல்
author img

By

Published : Jun 8, 2023, 8:37 PM IST

சென்னை: இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 8) வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'நேற்று (ஜுன் 7) காலை 8:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் “பிப்பர்ஜாய்” (Biparjoy Cyclone) நேற்று காலை 11:30 மணி அளவில் மிகத் தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து இன்று (ஜுன் 8) காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவிலிருந்து மேற்கு – தென்மேற்கே சுமார் 850 கிலோமீட்டர் தொலைவில் மும்பையிலிருந்து தென்மேற்கே சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.

இதனிடையே, வெப்பச்சலனம் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வரும் 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை: இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: அரபிக்கடல் பகுதியில் இன்று கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 135 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, அதே பகுதிகளில் காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 145 முதல் 155 லோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.06.2023: வடக்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 145 முதல் 155 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 170 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

11.06.2023: மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 135 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

12.06.2023: மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 130 முதல் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 155 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு, மாலை முதல் அதே பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

13.06.2023: வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 115 முதல் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 160 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.06.2023 மற்றும் 09.06.2023: வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

10.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் கரைக்கு திரும்புக: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் ஜூன் 11, 12 ஆகிய நாட்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த நாட்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடலின் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: பட்டம் வாங்க காத்திருக்கும் மாணவர்கள்.. தேதி கொடுப்பாரா ஆளுநர்.. நெல்லை பல்கலையில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.