தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் துரை. ஜெயச்சந்திரனுக்கு, பஞ்சாப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகில் சராஃப் என்பவர் புகார் ஒன்றை அளித்தார். அதில், "நீதிமன்றம் ஒருவரைக் குற்றவாளி என அறிவிக்கும் முன்னர் உரிய விதிகளைப் பின்பற்றாமல் குற்றம் சாட்டப்பட்டவரைக் குற்றவாளி என பிரகடனப்படுத்தும் வகையில் காவல் துறையினர் ஊடகத்தினர் முன் அவர்களை அணிவகுக்க வற்புறுத்துவது சட்டவிரோதமானது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊடகங்கள் முன் காவல் துறையினரால் நிறுத்தப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இதனை வழக்காக ஏற்றுக்கொண்ட மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவர் துரை. ஜெயச்சந்திரன், இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: களப்பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவு விநியோகம் - வழக்கு பதிந்த மனித உரிமை ஆணையம் !