ஹுக்கா பார்லர் நடத்திவந்ததாகக் கூறி பார்லர் உரிமையாளர் உள்பட எட்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
ஹுக்கா பார்லர் - உரிமையாளர் கைது சென்னை கீழ்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஹுக்கா பார்லர் நடத்திவருவதாக கீழ்பாக்கம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் ரெஸ்டராண்ட் என்ற பெயரில் ஹுக்கா பார்லர் நடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து, சட்டவிரோதமாக ஹுக்கா பார்லர் நடத்திவந்ததாகக் கூறி ஆர்.ஏ. புரத்தைச் சேர்ந்த நவீன் (25), அயனாவரத்தைச் சேர்ந்த பிரணவ் (28) உள்பட எட்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இவர்களிடமிருந்து 88 ஆயிரம் ரூபாய், ஹுக்கா பொருள்கள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.