சென்னை ஐஐடியில் கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற முதல் கட்ட வேலை வாய்ப்பு முகாமில் 184 கம்பெனிகள் பங்கு பெற்றன. அவற்றில் 17 கம்பெனிகள் வெளிநாடுகளை சேர்ந்தவையாகும். அவற்றில் வெளிநாடுகளில் உள்ள 17 கம்பெனிகளில் பணியாற்றுவதற்கு 34 பேருக்கும், இந்தியாவில் உள்ள கம்பெனிகளில் பணியாற்றுவதற்கு 831 பேருக்கும் வேலை வாய்ப்பிற்கான முன் அனுமதி கடிதம் அளித்துள்ளனர்.
முதல் கட்ட வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு 1,298 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு மாணவிகள் வேலை வாய்ப்பிற்கு பதிவு செய்வதும் அதிகரித்துள்ளது. முன்னனி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு நிதி, ஆலோசனை உள்ளிட்டவற்றில் 31 விழுக்காடும், ஆராய்ச்சி மற்றும் பொறியியல் படிப்பிற்கு 43 விழுக்காடும், தகவல் தொழில்நுட்பத்துறையில் 23 விழுக்காடும், விரைவாக விற்பனையாகும் நுகர்பொருட்கள் துறையில் ஒரு விழுக்காடும், கல்வித்துறையில் இரண்டு விழுக்காடும் வேலை வாய்ப்பு உள்ளதாக வேலை வாய்ப்புத்துறை ஆலோசகர் சங்கர் ராம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
மாலை போட்டவர் போல் நடித்து திருடியவர் கைது: விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்!