சென்னை: நீடித்த வளர்ச்சிக்கு டிஜிட்டல் தொழிலகங்களில் ‘செலவு குறைந்த உற்பத்தி முறையை தற்பொழுது அதிகளவில் விரும்புகின்றனர் என சென்னை ஐஐடி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஐஐடி மெட்ராஸ் இணைப்பேராசிரியர் பால்கிருஷ்ண சி ராவ் கூறுகையில், “பொருள்கள் உற்பத்தியில் லாபகரமாக இருப்பதை உறுதி செய்ய குறைந்த செலவில் உற்பத்தி தேவை.
மரபு சார்ந்த முறைகளில் உற்பத்தி செய்யும்போது செலவு அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றம், பல்வகை உயிரின அழிவு, மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற தொடர்புடைய அம்சங்களால் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்னைக்குத் தீர்வு காண குறைந்த செலவில் நுகர்பொருள்களின் தேவையை நிறைவேற்றுவது அவசியமாகிறது.
தற்போது பொருள்கள் உற்பத்தி தத்துவத்தில் பெரியதே சிறந்தது என்ற தத்துவத்தில் இருந்து குறைந்த செலவுடையதே சிறந்தது என்ற தத்துவத்திற்கு மாறி வருகிறது” என்றார்.
நீடித்த மற்றும் பொருளாதார போட்டிகளுக்கு அப்பாற்பட்டு, குறைந்த ஆதார வளங்களைப் பயன்படுத்தி முகக்கவசம் தயாரிப்பு, கை கழுவும் இடங்கள், பரிசோதனை சாதனங்கள், மூச்சுவிட உதவி செய்யும் கருவிகள் போன்றவற்றின் உற்பத்தியை கரோனா தொற்று காலத்தில் வழங்கியது முக்கியமானது.
குறைந்த செலவிலான உற்பத்தி என்பது தரத்தை எட்டுவதற்கும், கழிவுப் பொருள்கள் இல்லாமல் ஆக்குவதற்கும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான செயல்பாட்டின் மூலம், செலவை குறைப்பதற்கும் நான்காம் தலைமுறை தொழில்துறைக்கு முக்கியமானதாக உள்ளது.
குறைந்த செலவிலான உற்பத்தி தொழில்நுட்பம் வணிக ரீதியாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிலும் மனித முயற்சிகளில் தாக்கத்தை அதிகரிக்கும். மேலும் ஐ.நா.வின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை சந்திப்பதற்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இந்த தொழில்நுட்பம் உதவும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலர் தினத்தில் இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் இளையராஜா!