ETV Bharat / state

கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா? - சீமான்

author img

By

Published : Aug 11, 2022, 3:57 PM IST

ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சீமான்
சீமான்

சென்னை: மாலை முரசு நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே?. அப்பொழுது அது சார்ந்து நிகழ்வுகளும் அதை சார்ந்த தலைவர்களும் தானே அவர் சந்திப்பார்.

தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் பற்றுக்கொண்டு பணியாற்றியவர் ராமச்சந்திரன் ஆதித்தனார். இரண்டு முறை அவரை இல்லத்தில் சந்தித்து இருகிறேன். எளிமையானவர். ஈழப்போர் தடுப்பதற்கு தொடர்பான செய்திகளை வெளியிட அனைவரும் தயங்கிய போது, இவர் செய்திகளை வெளியிட்டு பிறந்த இனத்திற்கு கடமையை செய்து பணியாற்றினார். அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்கள் அப்பொழுதுதான் நாடு உருப்படும்.

ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என கூறினார். அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி, மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாதா.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போராட்டத்தை திணித்தது யார்? நிர்வாகத்தின் மீது தவறு இல்லை என்றால் இப்பொழுது எப்படி நிர்வாகத்திற்கு தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். போராட்டத்திற்கு பிறகு தானே நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இப்பொழுதுதான் 4ஜி பிஎஸ்என்எல்-க்கு கொடுத்துள்ளீர்கள்: 5ஜியை முதலாளிகளுக்கு கொடுத்துள்ளார்கள்.

சுதந்திர தினத்தன்று எல்லாருக்கும் வீடு இருக்கும் என்று கூறினீர்களே வீட்டை காட்டுங்கள். ஒரு துணியில் கொடியை ஏற்றி விட்டால் நாட்டுப்பற்று வந்துவிடுமா? மின்சார சட்ட திருத்தம் பேர் ஆபத்தானது எனவும் அத்தியாவசிய பயன்பாடான மின்சாரத்தை தனியாருக்கு கொடுப்பதா?.

சொந்தமாக ஃபிளைட் இருக்கிறதா எதற்கு ஏர்போர்ட்? 4500 ஏக்கரில் ஏர்போர்ட் கட்டினாலும் அதையும் தனியாருக்கு தான் கொடுக்கப் போகிறீர்கள் உங்களுக்கென்று விமானம் உண்டா என சீமான் தொடர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை மாநாடு நடத்த திட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.