இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அதனை தடுக்க இந்த அரசு முயல்வதில்லை என மாதவரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சுதர்சனம் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ’தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விகிதங்களை ஒழுங்குப்படுத்த, கூடுதலாக கட்டணம் மற்றும் நன்கொடை வசூலில் ஈடுபடும் பள்ளிகளின் செயல்பாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ள, அவற்றின் மீது நடவடிக்கைகளை மேற்கொள்ள உறுதுணையாக இருக்கும் வகையில் இயற்றப்பட்ட தமிழ்நாடு பள்ளிகள் சட்டத்தை பொதுமக்கள் நாடலாம்.
குறிப்பாக, இந்த சட்டத்தின்படி அமைக்கப்பட்டு இப்போது முன்னாள் நீதியரசர் மாசிலாமணி தலைமையில் இயங்கும் தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவிடம் புகாரளிக்கும் பட்சத்தில், துறை ரீதியான நடவடிக்கைகள் அக்கல்வி நிறுவனங்கள் மீது நிச்சயம் எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது புகார் - 30 லட்சம் ரூபாய் மோசடி?