சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் தனித் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் மாதவராவ்.
இவர் நுரையீரல் தொற்று மற்றும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று (ஏப்.11) காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, " தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் உயிரிழந்திருப்பினும் திட்டமிட்டபடி மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் உயிரிழந்த மாதவராவ் வெற்றி பெற்றிருந்தால், அப்பகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.