ETV Bharat / state

சிலைக் கடத்தல் மன்னன் மறைவு; வாயைப் பிளக்க வைத்த இவரின் கிரைம் ரேட்!

author img

By

Published : Dec 8, 2022, 10:00 PM IST

வீட்டில் தோண்ட தோண்ட சிலைகளை பதுக்கி வைத்திருந்த பிரபல சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தமிழ்நாடு கோயில்களில் இருந்து பழங்கால சிலைகளைத் திருடி சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தவர், தீனதயாளன் (83). பிரபல சிலைக் கடத்தல் மன்னனான சுபாஷ் கபூரின் கூட்டாளியாக கருதப்படும் தீனதயாளன் கலைக்கூடம் என்ற போர்வையில் பல கோடி மதிப்பிலான பழங்கால சிலைகளை வெளிநாட்டிற்கு விற்பனை செய்து வந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தீனதயாளன் வீட்டில் அப்போதைய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், சோதனை மேற்கொண்டபோது பஞ்சலோக சிலைகள், பழங்கால சிலைகள், ஓவியங்கள் என மொத்தம் 800க்கும் மேற்பட்ட பழங்கால சிலைகளை மறைத்து வைத்திருந்தார்.

மேலும், தீனதயாளனின் கூடத்தில் புதைக்கப்பட்டிருந்த பல சிலைகளையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட தீன தயாளனை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த 2005ஆம் ஆண்டு பழவூரில் காணாமல் போன சிலை வழக்கு, 1995ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் ஆத்தநல்லூரில் சிலை திருட்டு வழக்கு, 2013ஆம் ஆண்டு விருதாசலத்தில் சிலை திருட்டு வழக்கு போன்ற வழக்குகளில் தீனதயாளன் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். தீனதயாளன் மொத்தமாக இரண்டு வழக்குகளின் குற்றவாளியாகவும் நான்கு வழக்குகளில் சாட்சியமாகவும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவைக் காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்த தீனதயாளன் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சமீபத்தில் தீனதயாளனுக்கு உடல் நலம் மோசம் அடைந்ததால் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

தீனதயாளன் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். சிலைக் கடத்தல் மன்னன் தீனதயாளன் உயிரிழந்துள்ளதால் அவர் மீதுள்ள வழக்குகள் என்னவாகும் என்பது கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பழனி முருகன் கோயில் உண்டியலில் திருட்டு: நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.