சென்னை: மதுரையைச் சேர்ந்த அமுதா 1994 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐஏஎஸ் அலுவலர். . கடலூரில் துணை ஆட்சியராகப் பணியை தொடங்கிய அவர், தர்மபுரியில் ஆட்சியராக இருந்த போது பெண் சிசுக் கொலை, குழந்தை திருமணத்திற்கு எதிராக திறம்பட செயலாற்றினார். பெண்கள் முன்னேற்றத்திற்கு பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.
தமிழ்நாடு பொது தேர்தல் துறையில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலராக இருந்துள்ளார். 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பருவமழை நிவாரணத்திற்கான சிறப்பு அலுவலராக பணியாற்றினார். தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டு குழு தலைவர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை திறம்பட கையாண்டவர். திமுக, அதிமுக என இருவேறு ஆட்சி காலத்திலும் சிறப்பாக பணியாற்றி கவனம் ஈர்த்தவர்.
முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி இருவரின் இறுதிச்சடங்கு நிகழ்வையும் சிறப்பாக ஒருங்கிணைந்து பாராட்டு பெற்றார். கடந்த ஆட்சி காலத்தில் ஒன்றிய அரசு பணிக்கு சென்ற அவர், பிரதமர் அலுவலக இணை செயலாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தமிழ்நாடு அரசு கேட்டுகொண்டதன் பேரில் மீண்டும் தமிழ்நாடு திரும்ப உள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசில் அவருக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் எனப் பேசப்படுகிறது.
இதையும் படிங்க: துர்காஷ்டமி அதுவுமா இப்படியா? - மன்றாடும் மதுவந்தி