தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவை சார்பில் இயக்குநர் பாரதிராஜா பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நவம்பர் 27 ஆம் தேதி ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்து எரிக்கப்பட்டது மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு.
இந்த கொடுஞ்செயலை செய்த கொடியவர்களை விரைந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் செய்த தெலங்கானா காவல்துறையை பாராட்டுகிறேன். மரண தண்டனை, என்கவுன்டரில் எனக்கு எப்பொழுதும் உடன்பாடு இல்லை. ஆனால், இந்த என்கவுன்டர் நிகழ்வை மட்டும் விதி விலக்காகப் பார்க்கிறேன். குற்றவாளிகள் என உறுதி செய்து உடனடியாக சுட்டுக்கொன்ற காவல் துறைக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
‘யாருக்கும் ஆதரவு கிடையாது’ - உள்ளாட்சி தேர்தல் குறித்து ரஜினி அறிக்கை!