ETV Bharat / state

13 வருடங்களாக குழந்தை இல்லாததால் தம்பதி மரணம்: கொலையா? தற்கொலையா? - Pulianthope Police Station

சென்னையில் 13 வருடங்களாக குழந்தை இல்லாத நிலையில் கணவன், மனைவி மரணம், கொலையா! தற்கொலையா என போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

13 வருடங்களாக குழந்தை இல்லாததால் தம்பதி மரணம்

author img

By

Published : Dec 28, 2022, 4:12 PM IST

சென்னை: புளியந்தோப்பு சாஸ்திரி நகர் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர், சக்திவேல்(45). இவரது மனைவி துலுக்கானம்(35). இருவரும் சென்னை மாநகராட்சி 128ஆவது வார்டில் (மாங்காடு) ஒப்பந்த அடிப்படையில் துப்பரவுத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

சக்திவேல், துலுக்கானம் தம்பதிக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆனநிலையில், இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை என்பதனால் கணவன், மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கணவன், மனைவி இருவரும் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இன்று காலை புளியந்தோப்பு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவயிடத்திற்குச்சென்று பார்த்தபோது வீட்டின் உட்புறமாக தாழ்ப்பாள் போட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு கட்டிலில் துலுக்கானம் இறந்த நிலையிலும், சக்திவேல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து இருந்ததைப் பார்த்து இருவரது உடலையும் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், குழந்தை இல்லாத விரக்தியில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

suicide
தற்கொலை எதற்கும் தீர்வல்ல

மேலும் சக்திவேல் மனைவி துலுக்கானத்தை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது துலுக்கானம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: Untouchability: புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை; நீதிமன்றத்தில் முறையீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.