ETV Bharat / state

‘குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம்’

சென்னை: குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா தெரிவித்தார்.

‘குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம்’
‘குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம்’
author img

By

Published : Jan 24, 2020, 8:14 PM IST

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் 16ஆவது அகில இந்திய மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று முதல் தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், நேதாஜியின் சித்தாந்தத்திற்கு எதிரான பல விஷயங்களை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை எதிர்கொண்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் நேற்றைய தினத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகிறது. எனவே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்களை அமல்படுத்தக் கோரி மார்ச் 8ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் சி.ஐ.டி.யு பெண்கள் ஈடுபடுவார்கள். நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதை அனைவரும் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், வலதுசாரிகள், இன வெறி, மத வெறி உள்ளிட்டவற்றை உருவாக்கி அதன்மூலம் சில இடங்களில் வெல்கிறார்கள்.

‘குடியரசு தினத்தன்று மனிதச் சங்கிலி போராட்டம்’

காஷ்மீரில் இன்றும் அடக்குமுறைகள் தொடர்கிறது. இணையத்தை முழுமையாக இன்று பயன்படுத்த முடியவில்லை என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள். காஷ்மீரில் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஜனவரி 26இல் தேசியக் கொடியை ஏற்றி, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தவுள்ளோம். ஜனவரி 27ஆம் தேதி சைதாப்பேட்டையில் பேரணி நடைபெற உள்ளது என்றார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 24.01.20

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிலை மட்டுமே செய்லத் தயாராக உள்ளோம்; வேறு கேள்விகளுக்கு பதிலளிக்க மாட்டோம்.., சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா பேட்டி..

சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் 16 வது அகில இந்திய மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நேற்று முதல் தொடங்கி 27 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து சி.ஐ.டி.யு அகில இந்திய தலைவர் ஹேமலதா பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது,

நேதாஜியின் சித்தாந்தத்திற்கு எதிரான பல விசயங்களை மத்திய அரசு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனை எதிர்கொண்டு அதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என நாங்கள் நேற்றைய தினத்தில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டோம். மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக,
சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், என்.பி.ஆர், என்.ஆர்.சி ஆகியவற்றுக்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டோம், இதுவும் ஒருவகை ஒத்துழையாமை மட்டுமே என்பவையாகும்.
அதே சமயம் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான பதிலை மட்டுமே செய்லத் தயாராக உள்ளோம் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து வருகிறது. எனவே பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க உரிய சட்டங்களை அமல்படுத்தக் கோரி மார்ச் 8 ம் தேதி சிறை நிரப்பும் போராட்டத்தில் சி.ஐ.டி.யு பெண்கள் போராடுவார்கள்..
நாட்டில் வேலை இழப்பு அதிகரித்துள்ளதை அனைவரும் ஒத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில், வலதுசாரிகள், இன வெறி, மத வெறி உள்ளிட்டவற்றை உருவாக்கி அதன் மூலம் சில இடங்களில் வெல்கிறார்கள்..
காஷ்மீரில் இன்றும் அடக்குமுறைகள் தொடர்கிறது. இணையத்தை முழுமையாக இன்றும் பயன்படுத்த முடியவில்லை என்று அங்குள்ள மக்கள் சொல்கிறார்கள்.
ஜனவரி 26 ல் தேசியக் கொடியை ஏற்றி, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த உள்ளோம்..
27 ம் தேதி சைதாப்பேட்டை முதல் பேரணி நடக்க உள்ளது என்றார்..

tn_che_04_citu_national_leader_hemalatha_press_meet_7204894

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.