ETV Bharat / state

ஃபோனி புயலால் பயனில்லை- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: ஃபோனி புயலால் தமிழகத்துக்கு எந்த விதத்திலும் பயனில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Apr 30, 2019, 8:33 PM IST

ஃபோனி புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய கடற்கரை ஒட்டிய மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபோனி புயல், நாளை மாலை ஒடிசா கடற்கரையை நோக்கி செல்லும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Fani Cyclone
ஃபோனி புயல்

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப், ஃபோனி புயலால் தமிழகத்திற்கு பயனில்லை என தெரிவித்துள்ளார். மேலும், ஃபோனி புயல் வடக்கு நோக்கு நகர்ந்துவிட்டால் சென்னையில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் கூறினார். ஃபோனி புயலால் சென்னையில் மழை வரும் என்று எதிர்பார்த்தால், சென்னையில் இந்த ஆண்டு முதல்முறையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

TamilNadu Weatherman
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்

சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். ஃபோனி புயல் முன்னெச்சரிக்கையாக, தமிழகத்துக்கு 309 கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

*''ஃபோனி புயலால் பயனில்லை- தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்*

கடந்த ஒரு வாரமாக ஹாட் டாபிக் ஆஃப் தி டவுனாக இருக்கும் ஃபனி புயல் சென்னையை நோக்கி நகரவில்லை என்றாலும், தன்னுடைய திசையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. வங்கம் நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலத்தில் கரையை கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபனி புயல் காரணமாக தமிழகம், ஆந்திரம், மற்றும் ஒடிசாவின் கடற்கரை மாவட்டங்களில் பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

சென்னை மண்டல வானிலை மையம் தொடர்ந்து அறிவிப்புகள், எச்சரிக்கைகள் கொடுத்து வந்த நிலையில் தமிழகத்திற்கு மழை இல்லை என்ற கசப்பான செய்தியே கடைசியாக மக்களுக்கு சென்றுஅடைந்தது. 

இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான  தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப், ஃபோனி புயலால் தமிழகத்திற்கு  பயனில்லை என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக 

சென்னை முதன்முதலாக 40 டிகிரி செல்சியல் வெப்பத்தை தொட்டுள்ளது; ஆனால் இது வெறும் டிரைலர் தான்;இந்த வாரத்தின் இறுதியில் இன்னும் அதிகமாக இருக்கும்;இன்றும் நாளையும் மேகமூட்டம் இருக்கலாம்;ஆனால் ஃபோனி வடக்கு நோக்கி நகர்ந்துவிட்டால் சென்னை வெப்பக்காற்றில் சிக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் தெரிவித்துள்ளார். 

மேலும் சென்னை மட்டுமல்லாமல் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய இடங்களிலும் கடுமையான வெப்பம் நிலவும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன்  பிரதீப் தனது முகநூல்  பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.