சென்னை தம்புசெட்டி தெருவில் திமுகவின் துறைமுக தொகுதி வேட்பாளர் சேகர்பாபுவை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி, "எங்கள் கூட்டணிக்கு வாக்களித்தால் விலைவாசி உயர்வை குறைப்போம். அதற்கான 100 சதவீத திட்டமிடல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குறைந்திருந்த பெட்ரோல், சமையல் எரிவாயு விலை மோடி ஆட்சி காலத்தில் அதிகரித்துள்ளது. திமுக கூட்டணிதான் மக்கள் நலனுக்கானது.
தற்போதைய அதிமுக ஆட்சி மோடியின் தயவாலேயே தற்போதுவரை நீடித்துவருகிறது. மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது நல்லதே. ஆனால், இதனால் தமிழ்நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை.
எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவியை பெறவில்லை என்றால் அவர் நடந்து சென்றுதான் பதவியை பெற்றார் என்பதற்கு பதிலளியுங்கள். மறைந்த முதலமைச்சர் ஜெயலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டபோது லேடியா? மோடியா? என்று கேட்டார். தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் மத்திய அரசை எதிர்த்து ஏதேனும் கேள்விகளை கேட்க முடியுமா" என கேள்வி எழுப்பினார்.