ETV Bharat / state

வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கப்பட்ட விவகாரம் - முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டிடம் அமலாக்கத்துறை விசாரணை! - வீட்டுவசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கிய விவகாரம்

வீட்டுவசதி வாரியத்தில் முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டிடம் மூன்று மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

முன்னாள் டிஜிபி ஜாபர் சேட்டிடம் மூன்று மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை!

author img

By

Published : Jun 21, 2022, 7:17 AM IST

சென்னை : கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் உளவுத்துறை ஐ.ஜியாக இருந்தவர் ஜாபர் சேட். இவர் அந்த பதவியிலிருந்தபோது, உண்மைகளை மறைத்து வீட்டு வசதி வாரிய மனை ஒதுக்கீட்டை பெற்று, பல கோடி ரூபாய் ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டது.

குறிப்பாக வீட்டு வசதி வாரியத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை முறைகேடாக ஜாபர்சேட் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், மகள் ஜெனீபர் ஆகியோர் மீது கடந்த 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே ஜாபர் சேட் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அதன் பின் ஐ.பி.எஸ் அதிகாரியான தன் மீது மத்திய அரசின் அனுமதியின்றி வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக கூறி ஜாபர் சேட் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் ஜாபர் சேட் மீதான குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்யுமாறும் அவருக்கு உரிய பதவியை வழங்குமாறும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் ரத்து செய்யப்பட்டது.

கடந்த 2021 ஆம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறை டி.ஜி.பி-யாக இருந்த ஜாபர் சேட் பணி ஓய்வு பெற்ற நிலையில், 2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஜாபர் சேட்டுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணையைத் துவங்கி நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை விசாரணையின் ஒரு பகுதியாக வழக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜாபர் சேட்டுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அதனடிப்படையில் நேற்று காலை 11.20 மணிக்கு ஆயிரம் விளக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாபர் சேட் ஆஜரானார். சுமார் 3 மணி நேரமாக வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து ஜாபர்சேட்டிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் விசாரணை தொடர்பாக மீண்டும் அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திமுக முக்கிய புள்ளி ஒருவருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : 'பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும்' - ஓபிஎஸ் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில் தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.