சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அண்ணாநகரில் வசித்துவந்தவர் சிவகுமார்(42). அவருக்கு ராஜேஸ்வரி(38) என்ற மனைவியும் 6 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளனர். அவர் 50ஆண்டுகள் பழமையான வீட்டில் வசித்துவந்ததால், அதனை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட முடிவெடுத்தார்.
அதன்படி பக்கத்துவீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பழைய வீட்டை ஆள்களை வைத்து இடிக்கத் தொடங்கினார். அதையடுத்து ஊரடங்கு காரணமாக இடிக்கும் பணி ஆள்களில்லாமல் பாதியில் நின்றது.
இந்த நிலையில் இன்று அவரே வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமார வீட்டின் மேல்தளம் இடிந்து அவர் மீது விழுந்தது.
அதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சங்கர் நகர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பட்டியலின மக்கள் வீடுகள் இடிந்து தரைமட்டம்!