சென்னை: தீபாவளி பண்டிகை வார விடுமுறை நாட்களைத் தொடர்ந்து திங்கள் கிழமை வரவுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்களும் சொந்த ஊர்களை நோக்கிக் கிளம்பி இருப்பார்கள். தீபாவளிக்கு மறுநாள் பள்ளி வேலைநாளாக இருந்தால் தீபாவளி அன்றே மாலையில் பணியிடத்துக்குத் திரும்ப வேண்டும்.
பலரும் சொந்த ஊருக்கு கிளம்பியிருப்பதால் போக்குவரத்து வசதியில் பாதிப்புகள் இருக்கும், இதனால் பயணத்தில் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால் பல தரப்பிலிருந்து தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அண்டை மாநிலமான புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான செவ்வாய் கிழமையும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19.11.2022 அன்று பள்ளி கல்லூரிகளுக்கு வேலைநாளாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மருத்துவப் பணியாளர் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வு!