இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புப் பொதுச்செயலாளர் செந்தில் குமார்,” நாட்டின் பிரதமராக இன்று நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பதவி ஏற்கிறார். தமிழகத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் எல்லாம் மாநில முதலமைச்சர் புகைப்படம், முன்னாள் முதலமைச்சர் படங்கள் வைப்பது வழக்கத்திலுள்ள ஒன்று. அதன்படி மத்திய அரசு அலுவலகங்களில் எல்லாம் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் ரயில் நிலைய மேலாளரிடம் மனுவுடன், புகைப்படமும் அளித்துளோம்.
மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவிப்புக்கிணங்க மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் கோரிக்கை மனுவும் புகைப்படமும் வழங்கப்படுகிறது. மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள், நிதிகள் எல்லாம் தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. மோடி அறிமுகப்படுத்திய முத்ரா திட்டத்தில் பயனடைந்தவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். எதிர் கட்சியினரின் பொய் பிரசாரத்தின் மூலம் தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வெற்றிபெற முடியவில்லை. இனி இந்து மக்கள் கட்சி சார்பில் நம்பிக்கை யாத்ரா என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.