அகில இந்திய இந்து மகா சபாவின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீகண்டன் மீது அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் நிரஞ்சனி, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், 2016ஆம் ஆண்டு இந்து மகா சபாவில் மகளிர் அணியில் இணைந்து பணிபுரிந்து வந்ததாகவும், பின்னர் தன்னை பொதுச் செயலாளராக தலைவர் ஸ்ரீகண்டன் நியமித்ததாக குறிப்பிட்ட நிரஞ்சனி, தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்க தொடங்கி, மிரட்டல் விடுத்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதனையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் ஸ்ரீகண்டன் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீகண்டனின் மனைவி நான்ஸி, காவல் ஆணையர் அலுவலகத்தில் நிரஞ்சனி மீது புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நான்ஸி, நிரஞ்சனி ஆண்களை மயக்கி பணம் பறிக்க கூடியவர் என்றும் பலருடன் அவர் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காண்பித்தார். மேலும் ஸ்ரீ மிகுந்த இரக்க மனம் கொண்டவர் என்பதால் கோடி ரூபாய் வரை நிரஞ்சனிக்கு செலவு செய்துள்ளதாக தெரிவித்ததோடு, சமீபத்தில் நிரஞ்சனியின் சகோதரர் திருமணத்திற்கு 20 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் கூறினார். அந்த பணத்தை திரும்ப கேட்டதால்தான் தனது கணவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டதாக நான்ஸி குற்றஞ்சாட்டினார்.
இதையும் படியுங்க: ஏடிஎம் கார்டை மாற்றி ரூ.30ஆயிரம் கொள்ளை - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை