ETV Bharat / state

Tamilnadu Budget: 2022-23: பட்ஜெட்டின் சில சிறப்பம்சங்கள் - தமிழ்நாடு பட்ஜெட் 2022-23

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு அளவிலான 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனின் சில முக்கிய அம்சங்கள்...

Tamilnadu Budget: 2022-23: பட்ஜெட்டின் சில சிறப்பம்சங்கள்

author img

By

Published : Mar 18, 2022, 10:52 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு அளவிலான 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று(மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

2014ஆம் ஆண்டு முதல் அபாயகரமாக அதிகரித்து வரும் வருவாய் பற்றாக்குறை மாற்றியமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், வருவாய் பற்றாக்குறை ரூ.7,000 கோடி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார். அதாவது, 4.61 விழுக்காட்டில் இருந்து 3.80 விழுக்காடாக குறையும். மாநில அரசின் உறுதியான நடவடிக்கைகளும், திறமையான நிர்வாகமும் இதை சாத்தியமாக்கியுள்ளன என்றார்.

"நமது நாட்டின் கூட்டாட்சிக் கொள்கையை சீர்குலைக்கும் முயற்சிகள் நம்மை மேலும் வேதனைப்படுத்துகின்றன. இருப்பினும், மாநிலங்களின் உரிமைகளுக்காக இந்த அரசாங்கம் தொடர்ந்து போராடும்" என்று நிதியமைச்சர் கூறினார். "மதிப்புக் கூட்டு வரி ஆட்சியின் போது தமிழ்நாடு கண்ட வருவாய் வளர்ச்சி, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து எட்டப்படவில்லை.

மேலும், கோவிட் தொற்றுநோய் அனைத்து மாநிலங்களின் நிதியையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நேரத்தில், ஜிஎஸ்டி இழப்பீடு காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் விளைவாக வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு சுமார் ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்” என்று பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் :

* தமிழ் வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்டவை இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் மட்டுமே பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்தார். இதற்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்த ஆண்டில், பாண்டிய மன்னர்களின் சங்க காலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிக்குத் தகுந்த இடத்தைக் கண்டறிய இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து பூர்வாங்க உளவுப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஏழு இடங்களில் அகழாய்வு, இரண்டு இடங்களில் தொல்லியல் ஆய்வு மற்றும் கொற்கையில் ஆரம்பகட்டப் பணிகளுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு.

* இந்த ஆண்டு விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்களில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்படும். மேலும், தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள பழங்குடியினர் ஆன்-சைட் அருங்காட்சியகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் உள்ள வரலாற்றுக்கு முந்தைய ஆன்-சைட் மியூசியம், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஹீரோ-ஸ்டோன் ஆன்-சைட் மியூசியங்களை மேம்படுத்த ரூ. 10 கோடி ஒதுக்கீடு.

* சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

* கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்திற்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு.

* வரையாடுகளைப் பாதுகாக்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு.

* புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்களில் ரூ.36 கோடி செலவில் மாவட்ட மைய நூலகங்கள் அமைக்கப்படும்.

* முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.1547 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மருத்துவத்துறைக்கு ரூ.17,091 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1949 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மாநிலத்தில் உள்ள பாரம்பரிய பொது கட்டடங்களைப் பாதுகாக்க, அவற்றின் உள்ளார்ந்த பாரம்பரிய மதிப்பில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள இந்த ஆண்டு ரூ.50 கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் ரூ.1,019 கோடி செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாகத் தரம் உயர்த்தப்படும்.

* 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மத்திய வருவாய்ப் பங்கில் தமிழ்நாட்டின் பங்கு 4.079 விழுக்காடாக உள்ளது.

* 15ஆவது நிதிக்குழுவின்கீழ் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக ரூ.21,246 கோடி வழங்க இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

* சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கப்படும்.

* தமிழ்நாட்டில் உள்ள 64 அணைகளைப் புனரமைக்க ரூ.1064 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்வளத்துறைக்கு ரூ.7338.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சமூக ஊடகங்களில் தவறான பிரசாரங்களைத் தடுக்க சமூக ஊடகங்கள் சிறப்பு மையம் அமைக்கப்படும்

* பெரியார் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 21 மொழிகளில் ரூ.5 கோடி செலவில் தொகுக்கப்படும்.

* வள்ளலாரின் 200ஆவது ஆண்டை ஒட்டி, வள்ளலார் பல்லுயிர் பாதுகாப்புத் திட்டம் ரூ.20 கோடியில் செயல்படுத்தப்படும்.

* பழமையான தர்காக்கள், தேவாலயங்களைப் புனரமைக்க ரூ.12 கோடி ஒதுக்கப்படும்.

* இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கப்படும்.

* தீயணைப்புத் துறைக்கு ரூ.496 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* நீர்நிலைகள் பாதுகாப்பு, அரசு நிலங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* சுய உதவிக்குழுக்களுக்கு கடன், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க ரூ.4,130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.

* ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு நிறுத்தினால், தமிழ்நாட்டுக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படும்.

* தமிழ் மற்றும் இந்திய-ஐரோப்பிய மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பை ஆராயவும், தமிழ் மொழி தொடர்பான பிற ஆய்வுகள் செய்யவும், 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

* விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.10 கோடியில் அருங்காட்சியகங்கள் கட்டப்படும்.

* நில அளவையை நவீனப்படுத்த, ரூ.15 கோடி கொள்முதல் ரோவர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தமிழ் வளர்ச்சித் துறைக்கு ரூ.82.86 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* லண்டன் கியூ கார்டனுடன் இணைந்து தாவரவியல் பூங்கா அமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

* குழந்தைகள் மத்தியில் சுற்றுச்சூழல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் கிண்டி தேசிய பூங்காவைப் புதுப்பிக்க 20 கோடி ரூபாய்.

* அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் உருவாக்கப்படும். ஐந்தாண்டுகளில் இத்திட்டத்திற்காக ரூ.7,000 கோடி செலவிடப்படும்.

* வடசென்னையில் ரூ.10 கோடியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். குத்துச்சண்டை, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி விளையாட்டரங்குகள் அமைக்கப்படும்.

*தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* இளைஞர் விளையாட்டு நலனுக்காக ரூ.293 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* மத்திய அரசின் வீடு கட்டும் திட்டமான அம்ருத் 2.0 திட்டத்திற்கு ரூ.2,030 கோடி ஒதுக்கீடு.

* நகர்ப்புற பூங்காக்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* சேத்துமடை, ஏலகிரியில் சூழல் சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* ஐஐடி, எய்ம்ஸ் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.’

ஆகிய அறிவிப்புகள், இன்றைய பட்ஜெட் தாக்கலில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.