சென்னை: தமிழ்நாடு அரசின் வேளான் பட்ஜெட் 2022-23 வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதில், விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உள்ள சிறப்பம்சங்கள் கீழ் வருமாறு:
- இயற்கை வேளாண்மை, இடுபொருட்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு ரூ.71 கோடி மதிப்பில் மாநில வேளாண்மை மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகம்.
- சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளுக்கு விதை முதல் விற்பனைக்கு ரூ.152 கோடியில் உதவி.
- சூரியகாந்தி மற்றும் சோயாபீன்ஸ் ஆகியவற்றிற்கு சிறப்பு கவனம் செலுத்தி எண்ணெய் வித்துக்களை ரூ.29.7 கோடிக்கு ஊக்குவித்தல்.
- ரூ.8 கோடியில் டிஜிட்டல் விவசாயம் அறிமுகம்.
- உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில், ஆதி திராவிடர், பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவிகித மானியம் வழங்க ரூ.5 கோடி.
- கரும்பு சாகுபடிக்கு உதவி - ரூ.10 கோடி.
- தென்னை, மா, கொய்யா மற்றும் வாழை தோட்டங்களில் ஊடுபயிருக்காக ரூ.27.51 கோடி.
- பசுமைக்குடில், நிழல்வலைக்கூடம், நிலப்போர்வை, ஹைட்ரோபோனிக்ஸ், செங்குத்து தோட்டம் (Vertical garden) போன்ற உயர் தொழில்நுட்பங்களுக்கு ரூ.25.9 கோடி.
- பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி.
- பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடி.
- பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடி.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தைகளில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி.
- பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் 'மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள்' அமைத்து, அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழ்நாடு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதி செய்து தரப்படும்.
- மாநில அளவிலான 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மேலாண்மை மையம்' அமைத்து வணிக நடவடிக்கைகளுக்கு காவிரி டெல்டா மாவட்டங்களில் 4,964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகளுக்கு ரூ. 80 கோடி.
இதையும் படிங்க:இதையும் படிங்க:ஏபிவிபி முன்னாள் தேசியத் தலைவர் வன்கொடுமை சட்டத்தில் கைது