தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை கடந்த 2 மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் ஒப்புதல் அளித்தார். பின்னர் சட்டமாகவும் அரசிதழில் வெளியானது.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு தற்காலிகமானது என தகவல் பரவியதற்கு, சட்டப்பேரவையில் நிறைவேற்றுப்பட்டுவிட்டதால் இச்சட்டம் நிரந்தரமான தான் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில் வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டை அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த ஆண்டு முதல் பின்பற்ற வேண்டும் என்று உயர்கல்வித்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: வன்னியர் உள்ஒதுக்கீட்டிற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!