ETV Bharat / state

அரசின் முதன்மை திட்டங்களை ஆய்வு செய்ய உயர்நிலை கண்காணிப்பு குழு! - chennai latest news

அரசின் முதன்மை திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காக தலைமை செயலாளர் தலைமையில் உயர்நிலை கண்காணிப்பு குழு  அமைக்கப்பட்டுள்ளது.

உயர்நிலை கண்காணிப்பு குழு
உயர்நிலை கண்காணிப்பு குழு
author img

By

Published : Sep 13, 2021, 7:39 PM IST

சென்னை : சட்டபேரவையில் சிறப்புத்திட்ட செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றன. அதில்,அரசின் முதன்மை திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் உயர்நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதன்மை திட்டங்களின் முன்னேற்றம், சவால்கள் பிரச்னைகள் குறித்து இந்த குழு விரிவான ஆலோசனை மேற்கொள்ளும்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அறிக்கை அடிப்படையில், முதன்மை திட்டங்களில் கொள்கை அளவிலான மாற்றங்கள், வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் ஆகியவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், முதலமைச்சர் முகப்பு பலகை தகவல் தொழில்நுட்பவியல் துறையால் உருவாக்கப்படும்.

இந்த முகப்பு பலகையின் மூலம் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படும். முக்கிய செயல் திறன் குறியீடுகளின் அடிப்படையில், தொடர்புடைய துறைகளின் செயல்பாடுகள் முதலமைச்சர் முகப்பு பலகை வாயிலாக கண்காணிக்கப்படும்.

இளைஞர்களுக்கு அரசின் செயல்பாடுகளில் செய்முறை அனுபவம் அளிக்கும் வகையில்,குறுகிய கால மாணவர்களுக்கான நிர்வாக செய்முறை பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்” என கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - நிதி உச்சவரம்பு 10 லட்சமாக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.