ETV Bharat / state

வக்கீலாகப் பதிய அதிக கட்டணம் வசூலா? - பார் கவுன்சில் பதிலளிக்க உத்தரவு

வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

High charges collect for advocates enrolment notice to bar council responds MHC

author img

By

Published : May 8, 2023, 7:59 PM IST

சென்னை: வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு, அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழக மாணவர் மணிமாறன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டப்படிப்பு முடித்த பின்னர் வழக்கறிஞராகப் பதிவு செய்வதற்கு கட்டணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மாணவர்களிடம் 11,100 ரூபாயும், இதர பிரிவு மாணவர்களிடம் இருந்து 14,100 ரூபாயும் வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பட்டதாரிகளால் இந்த தொகையை செலுத்துவது சிரமம் எனவும்; அரசு சட்டக்கல்லூரிகளில் ஓராண்டுக்கான படிப்பு கட்டணமே 500 ரூபாயைத் தாண்டாத நிலையில் இவ்வளவு அதிகமாக பதிவுக்கட்டணம் வசூலிப்பதாகக் கூறியுள்ளார்.

சட்டப்படி பதிவு கட்டணமாக 750 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டுமெனவும்; படிப்பு முடித்த பின்னர் பதிவு செய்வதற்கு காலதாமதமானால் அதற்கென கூடுதலாக அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மனுவில் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, மனு குறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: கேரளாவும் படகு விபத்துகளும் - 1924 முதல் 2023 வரை - ஒரு பார்வை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.