ஊரடங்கு காரணமாக, வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பி செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அதிகளவில் வருவதுண்டு. இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மூலிகை நீராவி பிடிக்கும் வசதி அமைக்கபட்டுள்ளது.
இந்த நீராவியில் கற்பூர வள்ளி, வேப்பிலை மற்றும் வெற்றிலை, மஞ்சள் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதனை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் பழனி குமார் ஆய்வு செய்தார்.
பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "தொலை தூரம் செல்வதற்காக ரயிலில் பயணிகள் அதிகம் பேர் பயணிக்கின்றனர். பயணிகளில் சிலருக்குத் தொற்று இருந்தால், இந்த மூலிகை நீராவியைப் பிடிக்கும் போது அது சரி ஆகும் என்பது நம்பிக்கை. இதற்கு மக்கள் மத்தில் நல்ல வரவேற்பு இருந்தால், கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களிலும், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களிலும் இந்த முறையை நடைமுறைப் படுத்துவோம்.
இது ரயில்வே காவல் துறையினரால் கொண்டுவரப்பட்டது. மேலும் ஒருவர் உபயோகப்படுத்தியதை, சானிடைசர் செய்த பிறகே மற்றொருவர் உயயோகப்படுத்த அனுமதிக்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாவட்டங்களிடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்!