ETV Bharat / state

'அடுத்த 24 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை' - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தருமபுரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai
author img

By

Published : Oct 14, 2019, 2:54 PM IST

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், 'தமிழ்நாடு, புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்குள் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

குறிப்பாக தருமபுரி, நாமக்கல், ஈரோடு, சேலம், நாகை, தஞ்சை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இரவில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகபட்சமாக 8 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, நீலகிரியில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது' இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

தமிழ்நாட்டில் சில இடங்களில் பரவலாக மழை- வானிலை ஆய்வு மையம்

Intro:Body:

Rain update

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.