சென்னை: தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் நாளை மறுநாள் (அக்.29) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேப்போல் அக்டோபர் 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை முன்னறிவிப்பாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழகத்தின் மழைப்பதிவு: அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில், மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, குருந்தன்கோடு, பூதப்பாண்டி ஆகிய பகுதிகளில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அதேப்போல், கன்னியாகுமரி மாவட்டத்தின் இரணியல் மற்றும் சுருளக்கோடு பகுதிகளில் தலா 6 செ.மீ. மழையும், தென்காசி மாவட்டம் ஆயிக்குடி பகுதியில் 5 செ.மீ. மழையும் பதிவாகிஉள்ளது என சென்ன மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாலத்தீவு புதிய அதிபரால் இந்திய மீனவர்களுக்கு சிக்கலா? பவளத்தீவில் நடப்பது என்ன?