சென்னையை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு செய்தனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் சிகிச்சை பெறும் வார்டுகளில் சுகாதாரச் துறை செயலாளர் ஆய்வு செய்தார்.
நோயாளியிடம் குறைகளை கேட்ட அவர் கழிவறை, சமையலறை, எக்ஸ்ரே எடுக்கும் அறை, அறுவை சிகிச்சை அறை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அறுவை சிகிச்சை வார்டுகளில் கூடுதல் கழிப்பறை வசதி செய்யவும், எக்ஸ்ரே எடுக்க காத்திருக்கும் மக்களுக்கு நாற்காலிகள் வசதிகள் ஏற்படுத்தி தரவும் உத்தரவிட்டார்.
சமையலறையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான உணவு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், “குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய் சேய் நல விடுதி கட்டிடம் ஆறு கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: G 20: பேரிடர் மேலாண்மையில் இந்தியா பல மாற்றங்களைக் கொண்டுள்ளது - பிரதமரின் முதன்மைச் செயலர்
ஒரு கோடி செலவில் ஆய்வகம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இதனை ஆய்வகம் கட்டும் பணிகளை பார்வையிட்டோம். தாம்பரம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட மருத்துவமனை அமைக்க 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்லியல் துறை சார்பில் இந்த இடத்திற்கான கட்டுமான பணிகளுக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் மாவட்ட மருத்துவமனை அமைக்க கட்டுமான பணி தொடங்கும்.
மேலும் அரசு மருத்துவமனைகளை பொறுத்த வரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பேணிக்காக்கப்பட வேண்டும். நோயாளிகளுக்கு கழிவறைகள் சுத்தமாக இருக்க வேண்டும் தரமான சுத்தமான உணவு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் இதனை வலியுறுத்தி அறிவுரைகளை வழங்கி உள்ளோம்” என்றார்.
முன்னதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவுள்ளது. அரசு தலைமை மருத்துவமனையாக இதை தரம் உயர்த்த 400 படுக்கைகளுடன் 100 கோடியில் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என சட்டசபையில் கூறினார்.
இதையும் படிங்க: மக்களுக்கு குட் நியூஸ் - தங்கம் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?