ETV Bharat / state

மருத்துவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பீலா ராஜேஷ்! - அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி

சென்னை: மருத்துவர்கள் தவறு செய்ததாக புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -பீலா ராஜேஷ்!
author img

By

Published : Jul 30, 2019, 3:00 PM IST

சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் இன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், சட்டப்பேரவை அறிவிப்பிற்கு இணங்க மருத்துவமனை தினம் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 133ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டுமென முதலமைச்சசர் உத்தரவிட்டிருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.

மருத்துவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பீலா ராஜேஷ்!

மேலும் பேசிய அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதுமான அளவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது தமிழ்நாட்டில் இல்லை. மருத்துவர்கள் தொடர்ந்து ஒழுங்காக பணி செய்கின்றனரா? என்பதை கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளம் போன்றவற்றில் மருத்துவர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Intro:மருத்துவர்கள் தவறு செய்தால் கடும் நடவடிக்கை
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் எச்சரிக்கைBody:சென்னை அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மற்றும் சமூக மகப்பேறியல் நிலையம் மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் மருத்துவமனையில் இன்று மருத்துவமனை தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவமனை தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வகையான கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் போட்டு வாழ்த்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழக சட்டப்பேரவையில் அறிவித்ததற்கு இணங்க மருத்துவமனை தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினத்தை கொண்டாட வேண்டுமென உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்களில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு தேவையான யோகா பயிற்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வாரத்தில் 2 நாட்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
கர்ப்பிணி பெண்களுக்கு தொடர் சிகிச்சை அளிப்பதற்காக ஒருங்கிணைந்த அடையாள எண் அளிக்கப்பட்டுள்ளது. அந்த எண்ணின் மூலம் அவர்களுக்குத் தொடர் சிகிச்சை அளிப்பதிலும் கண்காணித்து வருகிறோம். இந்த எண்ணினால் அவர்கள் எளிதில் குழந்தை பிறந்த உடன் பிறப்பு சான்றிதழ் பெற முடியும்.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைப்பயிற்சி, யோகா, உடற்பயிற்சி போன்றவற்றை பரிசோதனை முறையில் நான்கு இடங்களில் அளிக்க உள்ளோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு போதுமான அளவு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் பற்றாக்குறை என்பது தமிழகத்தில் இல்லை. மருத்துவர்கள் தொடர்ந்து ஒழுங்காக பணி செய்கின்றனரா? என்பதை கண்காணித்து வருகிறோம். சமூக வலைதளம் போன்றவற்றில் மருத்துவர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி உள்ளோம். அரசு இதனை தீர்ப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.