ETV Bharat / state

முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த பறக்கும் படை - ராதாகிருஷ்ணன்

சென்னை: கரோனா தொற்று விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பவர்களை கண்காணிக்க கரோனா தடுப்பு பறக்கும் படை விரைவில் அமைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

radhakrishnan
radhakrishnan
author img

By

Published : Mar 12, 2021, 10:44 AM IST

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று (மார்ச் 11) மாலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தகுந்த இடைவெளி பின்பற்றுதல், கை கழுவுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். முகக்கவசம் அணியாதவர்களிடம் முகக்கவசம் அணியுமாறும் வலியுறுத்தினார்.

மேலும் முகக்கவசம் அணியாமல் இருப்பவர்களிடம் அபராதம் வசூலிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது இந்த நிலை தமிழ்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. முன்பு கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500க்கு கீழ் இருந்த நிலையில், தற்போது 700ஐ நெருங்கியுள்ளது. மீண்டும் கடந்தாண்டு நிலையை கொண்டுவராமல் இருக்க இது ஒரு எச்சரிக்கை மணி.

தற்போது எப்படி மகாராஷ்டிரா தத்தளிக்கிறதோ, அதுபோன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் ஒத்துழைப்பு குறைவாக உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை. தாம்பரம், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் கட்டாயமாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

இது போன்று பொது இடங்களில் மட்டுமல்லாமல் குடியிருப்புப் பகுதிகள், திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளிலும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கிறது. முகக்கவசம் அணியாமல் இருப்பதோடு, அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடுகின்றனர்.

மக்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் எங்களிடம் கூறுவதில்லை. அவர்களே வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள். இதனால் பாதிப்பு வீடு முழுவதும் பரவுகிறது. மக்கள் தயவு செய்து அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும்.

முகக்கவசம் அணியாமல், கரோனா தொற்று விதிகளை முறையாகப் பின்பற்றாமல் இருப்பவர்களை கண்காணிக்க கரோனா தடுப்பு பறக்கும் படை விரைவில் அமைக்கப்படவுள்ளது.

தடுப்பூசிக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நாளொன்றுக்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. டாக்ஸி, ஆட்டோ டிரைவர், ஹோட்டல், நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட 3000 மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி போடப்படுகின்றன. சுகாதார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் போடாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா பரவலுக்கான எச்சரிக்கை மணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.