சென்னை: சமீபத்தில் இயக்குநர் 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'அண்ணாத்த'. இந்தப் படத்தை 'சன் பிக்சர்ஸ்' தயாரித்து வருகிறது.
இந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பானது முழுவதும் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டப் பலர் நடித்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (மே.12) தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.
பின்னர் காரின் மூலம் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் 'அண்ணாத்த' திரைப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பானது, மேலும் பத்து நாட்களுக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கில்லி' நடிகரின் உயிரைப் பறித்த கரோனா!