காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக இந்து சமய அறநிலையத் துறை திருப்பணிப் பிரிவு கூடுதல் ஆணையர் கவிதா 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, தமிழ்நாடு அரசு அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து, தன்னை மீண்டும் பணியமர்த்தக்கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், கவிதாவின் பணியிடை நீக்க உத்தரவை இன்னும் நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.