ETV Bharat / state

சென்னையில் கத்திமுனையில் ரூ.5 லட்சம் கொள்ளை.. காவல்துறை சிசிடிவி வேலை செய்யாததால் சிக்கல்!

சென்னையில் ஏடிஎம்மில் ஹவாலா பணம் செலுத்த வந்த நபரிடம், கத்திமுனையில் 5 லட்சம் ரூபாய் கொள்ளை அடித்த விவகாரத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் ரூ.5 லட்சம் ஹவாலா பணம் கத்திமுனையில் கொள்ளை!

author img

By

Published : Jan 30, 2023, 9:49 AM IST

சென்னை: புது வண்ணாரப்பேட்டை பூண்டிதங்கம்மாள் தெருவைச் சேர்ந்தவர் மைதீன் (37). இவர் டிரை புரூட்ஸ் சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். அதேநேரம் ஹவாலா பணத்தை கமிஷன் அடிப்படையில் பெற்று, சம்மந்தப்பட்ட நபர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஏடிஎம் மூலமாக வைப்புத்தொகை செய்வதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி வழக்கம்போல கொத்தவால் சாவடியைச் சேர்ந்த நஜீம் என்பவர் கொடுத்த 9 லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை, 7 வங்கி ஏடிஎம்களில் செலுத்த மைதீன் சென்றுள்ளார். இதற்காக சென்ட்ரல் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள ஏடிஎம்களில் 3.78 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செய்துள்ளார்.

பின்னர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கி ஏடிஎம்மில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் முகத்தைத் துணியால் மறைத்தபடி அணிந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் மைதீனை வழிமறித்துள்ளனர். தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி, மைதீனிடம் இருந்த 5 லட்சம் ரூபாயைப் பறித்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து இதுதொடர்பாக மைதீன், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்யத் தொடங்கினர். ஆனால் முதலமைச்சரின் வீடு உள்ள தேனாம்பேட்டை பகுதியில் போலீசார் சார்பாகப் போடப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பெரும்பாலானவை வேலை செய்யாததால், அந்த பகுதிகளில் உள்ள கடைகளிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளை கும்பல், குறுகிய சந்துகளில் சென்று தேனாம்பேட்டையைப் பல முறை சுற்றிவிட்டு, பின்னர் பிரிந்து சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து கடந்த 8 நாட்களில் அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்ததில், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி ஜான்ஜெய்சிங் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை வழக்கில் சிறையில் இருக்கும்போது பழக்கமான தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜிஎச் ரமேஷ் இந்த வழிப்பறி கொள்ளை திட்டத்திற்கு மூளையாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளது.

மேலும் மைதீன் தினந்தோறும் ஹவாலா பணத்தை ஏடிஎம்களில் போடுவதை, அவரோடு இருக்கும் சிலரே ரமேஷிடம் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஹவாலா பணம் என்பதால், கொள்ளை அடித்தால் போலீசாரிடம் புகார் அளிக்கமாட்டார்கள் என தனது திட்டத்தை கூறியதாகவும், தங்களுடன் சிறையிலிருந்த நீலாங்கரையைச் சேர்ந்த ரவுடி சங்கர் என்பவரையும் கூட்டு சேர்த்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும் 4 லட்சம் ரூபாய் பணம் மட்டுமே கொள்ளை அடித்ததாகவும், கொள்ளை அடித்த பணத்தை ரமேஷ், சங்கர் மற்றும் ரமேஷின் கூட்டாளிகள் இருவர் என 5 பேரும் பங்கீட்டு கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து வழிப்பறிக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஜிஎச் ரமேஷ் மற்றும் சங்கரை பிடித்தால் ஹவாலா பணத்தை பற்றி துப்பு கொடுத்தவர்கள் பற்றியும், கொள்ளையில் ஈடுபட்ட மற்றவர்களைப் பற்றியும் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். மேலும் முதலமைச்சரின் வீடு உள்ள தேனாம்பேட்டை பகுதியிலே காவல் துறையினரால் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாமல் இருப்பதால், அதனை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: காரை மறித்து 2 கோடி ரூபாய் கொள்ளையடித்ததாக கூறப்பட்ட வழக்கு: கேரள மாநிலத்தைச் சார்ந்த 6 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.