ETV Bharat / state

சாலையோரம் படுத்துறங்கும் மக்களுக்குத் தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டதா?

சென்னையில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும் என மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திவருகின்றனர்.

have-road-side-people-been-fully-vaccinated
சாலையோர படுத்து உறங்கும் மக்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டதா?
author img

By

Published : Apr 20, 2021, 9:28 AM IST

சென்னை: சென்னை மாநகராட்சியில் இரவு நேரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையோரங்களில் கூடாரம் அமைத்தும், சாலையோரப் பகுதிகளில் படுத்துறங்கி தினக்கூலிகளாகப் பணியாற்றியும் வருகின்றனர்.

ஆதரவற்ற 45 வயதிற்கும் மேற்பட்ட பலரும் சாலையோரப் பகுதிகளில் தங்கிவருகின்றனர். இவர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இருக்குமா? என்பது தெரியவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் இவர்களுக்குப் போதிய ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் 45 வயதிற்கும் மேற்பட்ட 22 லட்சம் பேரில் இதுவரை ஒன்பது லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர், 45 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தாங்களே முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

ஆனால், சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வரவில்லை. சிறப்பு முகாம் அமைத்து அவர்களுக்கு உடனே தடுப்பூசி செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட 10 லட்சம் பேரில் ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே இரண்டாம் தவணை எடுத்துக்கொண்டனர்.

விழிப்புணர்வு தேவை

மாநகராட்சியில் சாலையோரம் தூங்குபவர்களுக்கு முறையான தங்கும் விடுதிகள் இருந்தாலும், பணிநிமித்தமாக சாலையோரங்களில் தங்கிவிடுகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 25 பேர் தங்கும் வகையில் தங்கும் விடுதி கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.

போதிய விழிப்புணர்வு இல்லாததால், அங்கு யாரும் தங்குவதில்லை. மாநகராட்சி சார்பில், நடத்தப்பட்ட ஆய்வில், 204 இடங்களில் 3,574 நபர்கள் வீடு இல்லாமல் சாலையோரம் வசித்துவருகின்றனர். இதில், 50 பேர் மட்டுமே முறையாக தங்கும் விடுதிகளில் தங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.

சுகாதாரத் துறை அலுவலர்கள், மருத்துவர்கள் கருத்து

இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, மண்டல வாரியாகச் சுகாதாரத் துறை அலுலர்கள் 45 வயதிற்கும் மேற்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றுவருவதாகவும், இவர்களை நிரந்தர மையங்களுக்கு கொண்டுசென்று குடியமர்த்தும் பணி நடைபெறுவதாகவும், தெரிவிக்கிறார்கள்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சாந்தி இது தொடர்பாக நம்மிடையே பேசும்போது, இதுபோன்ற பெரும்பாலான மக்களை உரிய முறையில் கண்டறிந்து முழுமையாக அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

சென்ட்ரல், தி.நகர், பிராட்வே பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தடுப்பூசி குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை, இவர்களுக்கு உரிய முறையில் தடுப்பூசி செலுத்தவில்லை எனில், இவர்கள் மூலமாக மற்றவர்களுக்குத் தீவிரமாகக் கரோனா பரவும்" எனத் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பு மக்களையும் கண்டறிந்து தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட வேண்டும் என்பதே மருத்துவர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: 'தடுப்பூசி குறித்து வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.