ETV Bharat / state

12ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் தேதி அறிவிப்பு - Examination for Class 12th Public Examination

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் வரும் ஜூன் 14ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

12th hall ticket
12ம் வகுப்பு ஹால் டிச்கெட்
author img

By

Published : Jun 9, 2023, 10:30 PM IST

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு, கடந்த மார்ச் 13ஆம் தேதியில் தொடங்கி ஏப்ரல் 3ஆம் தேதி வரையில் நடந்தது முடிந்தது. அந்தத் தேர்வினை 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் மீதமுள்ள 47 ஆயிரத்து 934 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.

ஜூன் 19-ல் துணைத்தேர்வு: இந்நிலையில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வருகை தராத மாணவர்களுக்கான துணைத்தேர்வினை எழுதுவதற்கு மே 11ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் மற்றும் இந்த தேர்வு எழுத தங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களில், மே 11ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அப்படி விண்ணப்பித்த மாணவர்களுக்கு இவர்களுக்கானத் துணைத்தேர்வுகள் ஜூன் 19ஆம் தேதியில் தொடங்கி 26ஆம் தேதி வரையில் நடைபெறும் எனவும் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

இதுகுறித்து அரசுத்தேர்வுகள் துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழகத்தில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை வரும் ஜூன் 14ஆம் தேதி மதியம் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்ததேதியைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மற்றும் தேர்விற்கான அட்டவணை அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செய்முறை தேர்வுகள் குறித்து தனித் தேர்வுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி தெரிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட நுழைவுச் சிட்டுன்ரி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அரசு தேர்வர்கள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் மற்றும் வருகைப் புரியாத மாணவர்கள் துணைத் தேர்விற்கு விண்ணப்பக்கலாம் என்று அதற்கான கால அட்டவணையை சமீபத்தில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டிருந்தார். அதில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 10.10 மணி வரையில் வினாத்தாள் படிப்பதற்கும், 10.10 மணி முதல் 10.15 மணி வரையில் விடைத்தாளில் தகவல்களை சரிபார்க்கவும், 10.15 மணி முதல் மதியம் 1.15 மணி வரையில் தேர்வு எழுதுவதற்கும் அனுமதிக்கப்படுவர். அதன்படி,

  • ''ஜூன் 19ஆம் தேதி - மொழித்தாள்;
  • ஜூன் 20ஆம் தேதி - ஆங்கிலம்;
  • ஜூன் 21ஆம் தேதி - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் கொள்கை, கம்ப்யூட்டர் அறிவியல், கம்ப்யூட்டர் பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் தொழிற்கல்வி, அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்
  • ஜூன் 22ஆம் தேதி - இயற்பியல், பொருளியல், கம்ப்யூட்டர் தொழில்நுட்பம்
  • ஜூன் 23ஆம் தேதி - கணக்கு, விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, விவசாய அறிவியல், நர்சிங்( பொது)
  • ஜூன் 24ஆம் தேதி - தாவரவியல், உயிரியல், வரலாறு, வணிக மேலாண்மை மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல்ஸ் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயல்முறைகள்
  • ஜூன் 26ஆம் தேதி - வேதியியல், கணக்குப் பதிவியியல், புவியியல் தேர்வுகள்'' நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கால்நடை மருத்துவம் படிப்புக்கான 760 இடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.