ETV Bharat / state

ஹத்ராஸ் சம்பவம்: அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேசத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இணைய வழி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துகிறது.

hadras-dalit-woman-needs-justice-all-womens-federation-organized-online-protest

author img

By

Published : Oct 4, 2020, 10:49 AM IST

சென்னை: உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்நிலையில், அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இணைய வழி கண்டன ஆர்பாட்டம் இன்று நடைபெறுகிறது. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, நாக்கு துண்டிக்கப்பட்டு முதுகெலும்பு உடைக்கப்பட்ட அந்த பெண் இறந்த பிறகும் அவருக்கு இளைக்கப்பட்ட கொடுமை தீரவில்லை. குடும்பத்தின் அனுமதியில்லாமல், அவசரமாக அந்த பெண் எரியூட்டப்பட்ட பின்னர், பாலியல் வல்லுறவுக்கு சாட்சி எதுவும் இல்லை என்று மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் கூறுகின்றன.

நீதி கேட்க சென்ற அரசியல் தலைவர்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். இந்தக் கொடூரத்தை உலகறியச் செய்த பத்திரிகையாளரின் தொலைபேசி வேவு பார்க்கப்படுகிறது.

பெண்கள் மீதான வன்முறை நாடெங்கிலும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், ஹத்ராஸ் பெண்ணுக்கு சாதிய ஆதிக்கமும் ஆணாதிக்கமும், அதிகாரமும் இணைந்து இழைத்துவரும் அநீதியும் வன்முறையும் நீதி மற்றும் சமத்துவத்தின் மேல்கொண்ட நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது.

ஹத்ராஸ் பெண்ணிற்கு நீதி வேண்டும். சாதி, பாலினம், வர்க்கம் என மூன்று தாக்குதல்களை எதிர்கொண்டு வரும் பட்டியலினப் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிற நோக்கத்துடன் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு இன்று(செப் 04) ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

இணையவழியில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், திரைப்பட இயக்குநரும் நடிகையுமான ரோகிணி, பெண்ணிய செயற்பாட்டாளர் வ.கீதா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

hadras-dalit-woman-needs-justice-all-womens-federation-organized-online-protest
இணைய வழி கண்டன ஆர்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களைப் பாதுகாக்கத் தவறிய உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலகவேண்டும். சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அலுவலர்கள், காவல் துறை, மருத்துவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை ஆணையம் அமைத்து விரைவில் உரிய தண்டனை வழங்கிடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: ஹத்ராஸ் கொடூரம் : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 40 பெண் வழக்குரைஞர்கள் கடிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.