ETV Bharat / state

நெல்லை பள்ளி மாணவர் மீது சாதி வெறி தாக்குதல்; ஜி.வி.பிரகாஷ், மாரி செல்வராஜ் கண்டனம்! - மாரி செல்வராஜ்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டிலியன மாணவன் மீது சாதி வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் மாரி செல்வராஜ் கண்டனம்
ஜிவி பிரகாஷ் மாரி செல்வராஜ் கண்டனம்
author img

By

Published : Aug 11, 2023, 6:06 PM IST

திருநெல்வேலி: நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் மகன் சின்னதுரை (17) 12-ஆம் வகுப்பும், மகள் சந்திராசெல்வி (14) ஒன்பதாம் வகுப்பும், வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வருகின்றனர். சின்னத்திரை பட்டியலினத்தை சார்ந்தவர் என்பதால் உடன் படிக்கும் வேற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவர்கள் சின்னத்துரையை மிரட்டுவதும், அடிப்பதும், கடைக்கு சென்று வர சொல்லியும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த சின்னத்துரை இனிமேல் பள்ளிக்கு போகமாட்டேன் என்று வீட்டில் கூறியுள்ளான். இதனையடுத்து அவனது அம்மா பள்ளிக்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். பின்னர் சம்மந்தப்பட்ட மாணவர்களை ஆசிரியர் அழைத்து கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள் நேற்றிரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த சின்னத்துரையை வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அப்போது அங்கு இருந்த அவரது தங்கை சந்திராசெல்வி தடுத்துள்ளார். அதில் அவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. அதனால் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனை அடுத்து அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இதனை நேரில் பார்த்த சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இறந்த கிருஷ்ணின் உடலை வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். படிக்கின்ற மாணவர்கள் சாதிய வெறியோடு சக மாணவனை சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

  • தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன்🙏 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்

    — G.V.Prakash Kumar (@gvprakash) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிலையில் சமூகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கும் இசை அமைப்பாளர் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் இந்த சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். "சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

  • கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்… pic.twitter.com/XCxkZdJgdv

    — Mari Selvaraj (@mari_selvaraj) August 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல் இயக்குநர் மாரி செல்வராஜ் இச்சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்" என்று சம்பவ நிகழ்ந்த இடத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: லட்சுமி மேனனுடன் திருமணமா? - நடிகர் விஷால் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.